3 மாத காத்திருப்புக்கு பின்னர் இந்தியா திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்!

3 மாத காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் தவித்து வரும் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : May 30, 2020, 04:28 PM IST
3 மாத காத்திருப்புக்கு பின்னர் இந்தியா திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்! title=

3 மாத காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் தவித்து வரும் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன், கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜெர்மனியில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை அவர் இந்தியாவை அடைவார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

"ஆம். ஆனந்த் இன்று திரும்பி வருவார்" என்று சதுரங்க மேஸ்ட்ரோவின் மனைவி அருணா சனிக்கிழமை காலை PTI-யிடம் தெரிவித்ததை அடுத்து இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு பிராங்பேர்ட்டில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் (AI-120) ஏறிய ஆனந்த், டெல்லி வழியாக பெங்களூரை அடைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், கர்நாடக அரசு விதித்த விதிகளின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார். "அவர் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை முடித்து, நெறிமுறைப்படி சென்னைக்கு வருவார்" என்று அருணா ஆனந்த் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியில் இருந்து விமானங்கள் டெல்லி மற்றும் பெங்களூரில் மட்டுமே தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சதுரங்க சேம்பியன், ஜெர்மனியில் பன்டெஸ்லிகா செஸ் லீக்கில் விளையாடுவதற்காக சென்றிருந்தார். ஆனால் COVID-19 வெடிப்பு உலகெங்கிலும் விளையாட்டு கால அட்டவணையை சீர்குலைத்ததைத் தொடர்ந்து, அவர் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனிடையே ஆனந்த் சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வீடியோ அழைப்புகள் மூலம் தவறாமல் தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் சதுரங்கம் தொடர்பான வேலைகளில் தன்னை மும்முரமாக வைத்திருந்தார் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News