மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Last Updated : Apr 14, 2017, 10:32 AM IST
மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி title=

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேமுதிக தலைவர் விஜய காந்த் உடல்நலக் குறைவு காரணத்தால் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை மணப் பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். 

அதன்பின் சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர் கடந்த 9-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சியின் வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

ஆனால் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்தனர்.

Trending News