நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம் கோவில்பட்டி காந்தி மைதானம் அருகேயுள்ள ரதவீதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார் அப்போது:-
நாம் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்ற பயம் எழுந்துள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை. ஓடும் நீரை கூட ஆழ்துளை கிணறு போட்டு தான் குடிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குடிக்க தண்ணீர் இல்லை. உணவிற்கு வழி இல்லை. காருக்கு வழி இருக்கு. செல்போனுக்கு வழி இருக்கு. எல்லாத்திற்கும் திட்டம் இருக்கு. ஆனால் 130 கோடி மக்களுக்கு குடிக்கும் தண்ணீருக்கும், உணவிற்கும் திட்டம் இல்லை. அதனால் தான் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என வந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் அழிவு தான் இதற்கு காரணம். மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் வாக்காளர்களாக மட்டுமே உள்ளீர்கள். திட்டமிட்டு இந்தியை திணித்து வருகின்றனர். இந்தியை படியுங்கள். ஆனால் வேலைக்கு வெளிமாநிலங்களுக்கு செல்லுங்கள்.
தமிழகத்தில் தமிழ்படித்தால் மட்டுமே வேலை. ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் தேவையில்லை. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேசியா சென்ற வைகோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது தனி மனிதனுக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. நமது நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.
இவ்வாறு சீமான் கூறினார்.