காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.
கோலாலம்பூரில் அருகே பள்ளியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியான ‛தருல் குரான் இட்டிஃபா' பள்ளியில் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக பலியாயினர். தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பலியான மாணவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் அமைத்துள்ள அமெரிக்க 7-ஆவது பிரிவைச் சேர்ந்த போர்க் கப்பல் திங்கள்கிழமை அன்று எண்ணெய் ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் அமெரிக்காவின் அமெரிக்க 7-ஆவது பிரிவைச் சேர்ந்த ஜான் எஸ். மெக்கெய்ன் போர்க் கப்பல் மோதியது. இந்த விபத்தின் போது கப்பலில் இருந்த 10 மாலுமிகள் மயமாகினார்கள். 5-க்கு மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர்.
தனுஷ் இன்று தனது 34வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார்.
தற்போது தனுஷ் மலேசியாவில் இருக்கிறார். அங்கு மலேசிய ரசிகர்கள் தனுஷிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனை தனுஷ், தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Was so overwhelmed by the love showered by fans in Malaysia .. was so touched when they sang happy birthday for me. Whatta birthday eve
— Dhanush (@dhanushkraja) July 27, 2017
நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம் கோவில்பட்டி காந்தி மைதானம் அருகேயுள்ள ரதவீதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார் அப்போது:-
நாம் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்ற பயம் எழுந்துள்ளது. குடிக்க தண்ணீர் இல்லை. ஓடும் நீரை கூட ஆழ்துளை கிணறு போட்டு தான் குடிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் வழங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு விமானத்தில் சென்னைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார் அவர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானநிலையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை அமர வைத்துள்ளனர்.
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை இந்தியா 2-2 என டிரா செய்தது.
இந்நிலையில் இன்று இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என நியூசிலாந்தை வீழ்த்தியது.
முதல் பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங், மந்தீப் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 2-வது பாதி நேரத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-0 என முன்னிலைப் பெற்றது.
நியூசிலாந்து வீரர்களால் எதிர்கோல் அடிக்க முடியாததால் இந்தியா 3-0 என வெற்றி பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று சந்திக்க உள்ளனர் என தகவல் வெளியானது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும், இன்று காலை ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார். ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர் மலேசிய பிரதமரும் அவர் மனைவியும். ரஜினியை மலேசியாவின் சுற்றுலா தூதராக வரும்படி இந்த சந்திப்பில் அழைப்பு விடுத்தனர்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நஜீப் ரசாக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வருகிறார்.
இந்தியா வரும் அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் கவர்னரை சந்திக்க உள்ளார். அடுத்து நஜீபும், அவரது மனைவியும் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.