சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், " சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து நிற்கக்கூடிய தைரியம் நமக்கு உள்ளது. அதனால் தான் தேர்தல் பின்னடைவுகள் அமமுகவை பாதிக்கவில்லை. அமமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. மதிய உணவு மட்டுமே கொடுத்துள்ளோம். ஆனால் பொதுக்குழு உறுபினர்களை தக்கவைக்க எடப்பாடி பழனிசாமி என்ன என்னசெய்தார் என்பது தெரியும்.
மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் தீய சக்தியான் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவை எதிர்க்க அம்மாவின் தொண்டரோடு இணைய தயார் என சொன்னேன். தேர்தலில் கூட போட்டியிடமாட்டேன் என சொன்னேன். ஏதோ நான் கூட்டணிக்காக காத்திருப்பதை போல நினைக்கிறார்கள். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் தான் ஊழல் வழக்குகளுக்காக அச்சத்தில் உள்ளனர். திமுகவுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் எண்ணம் இல்லை. எப்படியாவது டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸை ஒழித்துவிட வேண்டும் என்று நோக்கம் கொண்டிருக்கிறார்.
இதனை கண்டு அச்சப்படபோவதில்லை. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பெயரை எங்கும் பயன்படுத்தவில்லை. இருந்தபோதும் அதிமுகவினருக்கு ஏன் கோபம் வருகிறது?. அமமுக தனித்து நிற்கும். எடப்பாடி பழனிசாமி தனித்து நிற்பாரா?. பாமக கூட்டணியால் தான் வட தமிழகத்தில் அவர்கள் வெற்றிபெற முடிந்தது. டிடிவி தினகரனைப் பொறுத்தவரை துரோகத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். அரசியலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலரை வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன்" என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ