தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), விஏஓ உள்ளிட்ட 9351 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த 11ஆம் தேதி, தேர்வை நடத்தியது. இதற்காக 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். அவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியாகியுள்ள தகவலில், குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 992 பேர் முனைவர் (பிஎச்டி) பட்டம் பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்துடன் இளநிலை பட்டதாரிகள் 6.2 லட்சம் பேரும், பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் 1.92 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரிகள் 2.53 லட்சம் பேரும், எம்.பில் பட்டதாரிகள் 23,049 பேரும், பத்தாம் வகுப்பு படித்தவர்கள் 2.26 லட்சம் பேரும், 12ஆம் வகுப்பு படித்தவர்கள் 6.2 லட்சம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.