முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை

திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 07:03 AM IST
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை title=

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக (Dravida Munnetra Kazhagam) பொதுச்செயலாளர் துரைமுருகன் (Duraimurugan) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, முக ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் கூட்டம், நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. 

ALSO READ | MSME கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: 12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

அப்போது திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளது, குறிப்பாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவது, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்துவது, மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்களையும், தமிழக நலன் சார்ந்த விவகாரங்களை வலியுறுத்துவதிலும் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | மக்களுக்கு சுமை வேண்டாம்! பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் ரத்து -முதல்வர் அதிரடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News