மீனவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!
கடந்த சில நாட்களாக தமிழக அரசை எதிர்க்கட்சிகளும், நடிகர்களும் கடுமையாக குற்றசாட்டு வருகின்றனர். இதனால், தமிழக அரசியலில் சற்று சலசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘திராவிட மண்ணில் சாதி, மத, இன அரசியலுக்கோ, ஆன்மிக அரசியலுக்கோ இடமில்லை. தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் திமுக தடுத்து வருகிறது. ரஜினியும், கமலும் இணைந்தால் திமுகவின் வாக்குகளைதான் பிரிப்பார்கள். அதிமுகவின் வாக்குகளில் கை கூட வைக்க முடியாது’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்; உள்நாட்டு மீனவர்களுக்காக மத்திய- மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது. மீனவர் தினம் கன்னியாகுமரியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்விக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஒதுக்கி வருகிறது. கல்வி தொண்டில் தனியார் பள்ளிகள் பங்கெடுக்க விரும்பினால் அரசு தயாராக உள்ளது.
மெட்ரோ ரெயில் திருவொற்றியூர் வரை செல்லும் போது இந்த பகுதி மிகப்பெரிய வளர்ச்சி பெறும். நான் நிதி அமைச்சராக இருக்கும்போது வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் தீட்டப்பட்டது. படிப்படியாக 5 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் நிறைவேறும். 2025 ஆல் எல்லா வசதிகளும் வரும்போது வடசென்னை நன்கு வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.
இதற்க்கு முன்னதாக நாங்கள் உள்ளாட்சித்தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் தேர்தல் எப்படி நடந்தது என்பதை அனைவரும் அறிவோம். எங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. எதிர்க்கட்சிகள் எங்களை குறை சொல்லிக் கொண்டிருக்ககூடாது. ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மழை நின்ற பின்பு சென்னையில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.