திரையரங்குகளில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்தி நிர்ணயித்துள்ளது.
அதன்படி மாநகராட்சி, சிறப்பு நிலை நகராட்சி பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் கார், ஆட்டோக்களுக்கு ரூ.20 கட்டணமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறப்பு நிலை நகராட்சி தவிர உள்ள இதர பிரிவு நகராட்சிகளில் கார், ஆட்டோக்களுக்கு ரூ.15 கட்டணமும், இரு சக்கர வாகனத்துக்கு ரூ.7 கட்டணமும் வசூலிக்க வேண்டும்.
பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கார், ஆட்டோக்களுக்கு ரூ.5 கட்டணமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.3 கட்டணமாக வசூலிக்க வேண்டும். 3 பகுதிகளிலுமே சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது.
இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளார்.