அண்ணாநகர் துணை காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள மசூதிக்கு எதிரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே டாஸ்மாக் பாரும் உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி இந்த டாஸ்மாக் கடையும் செயல்படுகிறது. ஆனால் அதன் அருகில் உள்ள பாரில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் சென்று கேட்டாலும் சரி, அதிகாலை, 5 மணிக்குச் சென்று கேட்டாலும் சரி உடனடியாக மதுபான பாட்டில் கிடைக்கும். இதற்காக கூடுதல் பணம் தர வேண்டியது இருக்கும். ஆனால் 'குடி'மகன்கள் இதைப்பற்றி கவலைப்படாமல் கேட்கும் பணத்தை கொடுத்து பாட்டில்களை வாங்கி போதையேற்றி வருகின்றனர்.
இதேபோன்று ரவுண்டான அருகே உள்ள பாரிலும், சாந்தி காலனி பகுதியில் உள்ள பாரிலும் 24 மணி நேரமும் கள்ளசந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மதுபாட்டிலை வாங்கி செல்லும் மது பிரியர்கள் குடித்து விட்டு அங்கேயே ரகளையில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி அடைந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை
இதுமட்டும் அல்ல தமிழ் நாடு அரசின் தலைமைச்செயலகத்திற்கு எதிரே உள்ள அன்னை சத்தியா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரிலும் 24 மணி நேரமும் மதுபான விற்பனை களைகட்டி வருகிறது. நேரம் காலம் இல்லாமல் விற்கப்படும் மதுபானங்களால் இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.
இரவு 10 மணிக்கு மேல் அரை கதவுகள் மட்டும் மூடப்பட்டிருக்கும் பாரில் திருடர்களை போல் குணிந்து சென்று மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்செல்கின்றனர். பகலில் வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரியும்படி விற்பனை நடைபெறுகிறது. காலை 9 மணியளவில் எல்லாம் பார்களில் 50 க்கும் மேற்பட்டோர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கும் இந்த பார்கள் ஆளும் திமுகவை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பதால் அவர்களிடம் மாமூல் வாங்கிக்கொண்டு போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 'குவாட்டர் விலை ஏறிப்போச்சி' - கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த மதுப்பிரியர்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe