பெங்களூரு புகழேந்தியை அடிக்கப் பாய்ந்த அதிமுகவினர் .... சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெங்களூரு புகழேந்தியை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 22, 2023, 12:43 PM IST
  • பெங்களூரு புகழேந்தி மீது தாக்குதல்
  • சேலத்தில் அரங்கேறிய பரபரப்பு
  • எடப்பாடி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி
பெங்களூரு புகழேந்தியை அடிக்கப் பாய்ந்த அதிமுகவினர் .... சேலத்தில் பரபரப்பு title=

ஓபிஎஸ் அணி ஆலோசனை

தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த 19ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், பிரபாகரன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | காதலர்கள் தங்கி இருந்த அறையில் நுழைந்து ரூம் பாய் செய்த செயல்! அதிர்ச்சி சம்பவம்!

புகழேந்தி மீது தாக்குதல்

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த பெங்களூர் புகழேந்தியை, எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் சூழ்ந்துகொண்டு அவரை அவதூறாக பேசுவதோடு தாக்கத் தொடங்கினர். காரின் உள்ளே அமர்ந்திருந்தவாறே இதனை கவனித்த புகழேந்தி, காரின் ஜன்னலை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கார் கண்ணாடியை உடைக்க முயன்றனர். அதற்குள் சமாளித்துக் கொண்ட கார் ஓட்டுநர் வேகமாக காரை இயக்கியதால் பெங்களூர் புகழேந்தி தாக்குதலில் இருந்து தப்பினார்.

அதிமுகவினரிடையே மோதல்

இதனை கேள்விப்பட்டு அங்கு ஓடி வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து இருத் தரப்பினரையும்  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டது அங்கு இருப்பவர்களை முகம் சுழிக்க செய்தது. வசம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News