ஓசியில் பிரட் ஆம்லெட், சாக்லேட் ஜூஸ்... தகராறு செய்த பெண் போலீசார்!

Tamil Nadu Police News: கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு போலீசார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னணி குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 7, 2023, 03:43 PM IST
  • ஜூஸ் கடையில் அந்த 4 பெண் போலீசாரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
  • இதுகுறித்து சிசிடிவி ஆதாரம் கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
  • தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அந்த 4 பெண் போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஓசியில் பிரட் ஆம்லெட், சாக்லேட் ஜூஸ்... தகராறு செய்த பெண் போலீசார்! title=

Tamil Nadu Police News: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், சாக்லேட் ஜூஸ் போன்றவற்றை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஆவினில் குழந்தை தொழிலாளர்களா? சர்ச்சைகளும் விளக்கமும்!

தகராறும்... மிரட்டலும்...

அப்போது அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடைக்கு அவர்கள் சென்று உள்ளனர். கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவலர்களும் ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்தது. அதுமட்டுமின்றி, அந்த கடை உரிமத்தையும் ரத்து செய்துவிடுவதாக உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளனர் என புகார் எழுந்தது.

Tambaram Police

இது தொடர்பாக, அந்த ஜூஸ் கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்தி உள்ளார்.

இந்த விசாரணையில், அந்த ஜூஸ் கடையில் இரவு பணியில் ஈடுபட்ட நான்கு காவலர்களும் பொருட்கள் கேட்டு ரகளையில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஜெயமாலா உள்ளிட்ட நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தற்போது உத்தரவு அளித்துள்ளார். 

Tambaram Police

இவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இலவசமாக ஜூஸ் கேட்டு தகராறு ஈடுபட்ட காரணத்தால் நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | Viral Video: ரூ.2000 நோட்டு கொடுத்தது குற்றமா? பெட்ரோலை உறிஞ்சி எடுத்து அட்ராசிட்டி செய்த ஊழியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News