Aadhaar Mitra | இந்தியா முழுவதும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இதனையொட்டி ஆதார் சேவைகள் மக்களுக்கு ஒவ்வொரு ஊர்களிலும் வழங்கப்படுகிறது. பெயர் மாற்றம் முதல் முகவரி மாற்றம் வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலை வய்ப்பு திட்டம் முதல் ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை, கேஸ் சிலிண்டர் கணக்கு தொடங்குவது உள்ளிட்ட அரசின் சமூக நலத்திட்டங்கள் அனைத்தையும் பெற ஆதார் அட்டையில் இடம்பெற்றிருக்கும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்க, இப்போது மத்திய அரசு ஆதார் மித்ரா என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
UIDAI என்ற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் ஆதார் மித்ரா என்ற AI சாட்போட்டை அறிமுகப்படுத்தியது. தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கிறது. பயனர்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் uidai.gov.in உள்ள இந்த சாட்போட் மூலம் பல்வேறு ஆதார் தொடர்பான சேவைகளைப் பெறலாம். ஆதார் மித்ரா சாட்போட் வழங்கும் வசதிகளைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
ஆதார் மித்ரா சாட்போட்டைப் பயன்படுத்தி, உங்கள் PVC ஆதார் அட்டை ஸ்டேட்டைஸ் தெரிந்து கொள்ளலாம். உங்கள் அருகிலுள்ள நிரந்தர சேர்க்கை மையங்களைக் கண்டறியலாம். மேலும், E-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இந்த சாட்போட் வழியாக உங்கள் தொலைந்த ஆதார் அட்டை குறித்தும் புகார் செய்யலாம். மேலும், ஆதார் மித்ரா சாட்போட் உங்கள் ஆதார் அட்டையின் பதிவு/புதுப்பிப்பு நிலையை வழங்க முடியும். உங்கள் ஆதாரின் நிலையை, உங்கள் EID (பதிவு ஐடி), SRN (சேவை கோரிக்கை எண்) அல்லது URN (புதுப்பிப்பு கோரிக்கை எண்) ஆகியவற்றை சாட்போட்டில் பதிவிட்டு சரிபார்க்கலாம்.
ஆதார் சாட்போட் தனிநபர் தங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தைக் கண்டறிய உதவுகிறது. இதற்காக நீங்கள் புவன் ஆதார் போர்ட்டலையும் பயன்படுத்தலாம். தனிநபர்கள் ஆதார் மித்ரா சாட்போட்டைப் பயன்படுத்தி குறைகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த சாட்போட் மூலம் பெறப்பட்ட பதில்களுக்கான உங்கள் கருத்தையும் நீங்கள் தெரிவிக்கலாம். மேலும், சாட்போட் குறித்து ஸ்டார் மதிப்பீடுகளையும் உள்ளிடலாம்.
அதேநேரத்தில், சாட்போட் மூலம் ஆதார் தகவல்களை புதுபிக்க முடியுமா என்றால் செய்ய முடியாது. பயனர்கள் தங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் போன்ற தகவல்களை myAadhaar போர்ட்டலில் இலவசமாகப் புதுப்பிக்கலாம். அதில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றலாம். ஜூன் 14, 2025 வரை இலவசமாக இதை செய்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ