Pongal 2025 Nalla Neram: தைப் பொங்கல் நாளை கொண்டாப்படும் வேளையில், பொங்கலிடுவதற்கான நல்ல நேரம் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
தைப் பொங்கல் (Thai Pongal) அன்று பொங்கலிடுவது வழக்கம் என்றாலும், அதனை ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமாக பொங்கலிடுவார்கள். அப்படியிருக்க நல்ல நேரம் குறித்து தெரிந்துகொள்வது அவசியமாகும்.
பொங்கல் 2025 பண்டிகை (Pongal 2025) இன்று முதல் (ஜன. 13) அடுத்த நாள்கள் (ஜன. 17) வரை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
இன்று போகி பண்டிகை (Bhogi 2025) கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை அன்று பழைய பொருள்களை தீ மூட்டி கொளுத்துவார்கள். மேலும், சூரிய பொங்கலுக்கு தயாராவதற்கு பானைகளில் வர்ணம் பூசுவதல், வீட்டை கழுவி சுத்தம் செய்து, கோலம் போட்டு, வீட்டை முற்றிலும் அலங்கரிப்பார்கள்.
சூரிய பொங்கல் வைக்கும் இடத்தில் கோலமிட்டு, கோலத்தின் மீது அடுப்பை வைத்து, அடுப்பில் பானை வைத்து பொங்கலிடுவார்கள். பொங்கல் வைக்கும் பானைகளின் கழுத்தை சுற்றி மஞ்சள் கொத்தை கட்டுவார்கள்.
அதேபோல், ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் பொங்கலிடுவார்கள். சிலர் வீட்டு வாசலில் பொங்கலிடுவார்கள், ஒரு சிலர் வீட்டின் உள்ளே கேஸ் சிலிண்டரில் பொங்கலிடுவார்கள். இன்னும் சிலர் கோவிலுக்குச் சென்று கூட பொங்கலிடுவார்கள்.
அதுமட்டுமின்றி, ஒரு சிலர் வெறும் பச்சரிசி பொங்கலை மட்டும் வைப்பார்கள். இன்னும் சிலர் சர்க்கரை பொங்கலையும் சேர்த்து வைப்பார்கள். பொங்கல் வைத்து அது பொங்கும்போது பொங்கலோ பொங்கலோ என கூறி குலவையிடுவதும் வழக்கமாக உள்ளது.
பொங்கலுடன் காய்கறிகள், கிழங்குகள், கரும்புகள் உள்ளிட்டவை வைத்து பூஜை செய்து சூரிய பகவானுக்கு படையலிடுவார்கள்.
2025ஆம் ஆண்டு சூரிய பொங்கலை விடுவதற்கு அதிகாலை 5 - 6 மணி நல்ல நேரம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அந்த நேரத்தில் பொங்கலிட முடியவில்லை என்றால் காலை 6 மணிமுதல் 8.50 மணிவரையும், காலை 10 மணிமுதல் மதியம் 12 மணிவரையும் பொங்கலிட நல்ல நேரம் என தெரிவிக்கிறார்கள்.