இதுவரை இல்லாத வகையில் இந்த முறை மோடியின் வருகைக்கு சிறப்பு உத்தரவிட்ட ஸ்டாலின்!

பிரதமர் மோடி சென்னைக்கு வருகைபுரிவது தொடர்பாக சிறப்பு உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் ஈட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 25, 2022, 03:40 PM IST
  • மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் பல விஷயங்களை நடத்த முடியாது
  • மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி வந்தாக வேண்டும்
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை திமுக ஆதரிக்கும்
இதுவரை இல்லாத வகையில் இந்த முறை மோடியின் வருகைக்கு சிறப்பு உத்தரவிட்ட ஸ்டாலின்! title=

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். காலை ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் பங்கேற்கிறார். அதையடுத்து முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றுகிறார். 

ஹைதராபாத்தில் இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 5:45 மணியளவில் சென்னைக்கு வரவுள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் என ரூபாய் 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்களுக்கான பணிகளை அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.

மேலும் படிக்க | EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது

பின்னர் சில மணிநேரத்தில் அவர் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலிருந்து காரில் அடையாறில் உள்ள ஐஎன்எஸுக்கு சென்றடையவுள்ளார். மேலும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்து, பின்னர் இந்திய விமானப்படை விமானத்தின் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் மோடியை பாஜகவினர் ஆவலுடன் எதிர்பார்ப்பதை போல முதல்வர் ஸ்டாலினின் தரப்பும் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதற்கு முன்பு வரை, தமிழகத்திற்கு மோடி வருகை தரவுள்ளார் என்ற தகவல் கசிந்தாலே திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற நிலை இருந்தது. பல இடங்களில் கருப்புக்கொடியுடன் தொண்டர்களும் மக்களும் "கோ பேக் மோடி" என்ற வாசகங்களை கோஷமிட்டு பிரதமரை வழியனுப்பி வைப்பது வழக்கமாக தமிழகத்தில் எதிர்ப்பார்க்கக்கூடிய ஒன்றாகும்.

இந்நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் மோடியின் வருகையை எதிர்க்காமல் எதிர்நோக்குகிறார் என்ற தகவல் கசிவது சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் தானே.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு சிறப்பான உத்தரவை ஈட்டுள்ளார். அது என்னவென்றால், தமிழகத்தில் மோடியின் வருகையை எதிர்த்து யாரும் போராட்டங்கள் நடத்தக்கூடாது, விழா அரங்கில் கருப்பு சட்டைகள் அணிந்து யாரும் எதிர்ப்பு தெரிவித்துவிடக்கூடாது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவரது இவ்வுத்தரவு இதுவரையிலான வழக்கத்திற்கு மாறாக உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏன் இந்த மாற்றம் என்று ஆராய்யும்போது, மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதி வந்தாக வேண்டும் என கருதப்படுகிறது.

மேலும், மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் பல விஷயங்களை நடத்த முடியாது என்ற யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதற்கிடையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்றும் திமுக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

மேலும், இவ்வாறான பல காரணங்கலுக்காக திமுக அரசு மோடியின் வருகைக்கும், வெங்கையா நாயுடுவின் வருகைக்கும் ஆதரவு தரவுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க | Home Loan-ஐ விரைவில் அடைக்க: ஃபிக்ஸ்ட் வட்டி விகிதம், ஃப்ளோடிங்க் விகிதம்? எது சிறந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News