தமிழகத்திலிருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கும் கடல் வழியாக தங்கம், வைரம் மற்றும் போதை வஸ்துக்களான கஞ்சா, ஹெராயின் உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இலங்கையை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் கடலோர காவல் படையினர் ஹேவர் கிராப்ட் கப்பல் மூலம் தொடர்ந்து நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை தளத்தில் இருந்து நவீன ரக ஹெலிகாப்டர்கள் மூலம் தமிழக கடல் பரப்பு முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, இலங்கை கடற்படையினரும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம், வைரம் கடத்தப்பட்டு வருவதை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, இன்று இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பேர் படகு மூலம் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து படகை சோதனை செய்தபோது ஒரு கிலோ 960 கிராம் தங்க கட்டிகள் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.
மேலும் படிக்க | தங்கம் போல தக்காளியை திருடிய வாலிபர் ; ஏற்கனவே ஆப்பிளில் கைவைத்து ஜெயிலுக்கு போனவர்!
இதையடுத்து தங்கம் கடத்தி வந்த இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இல்ஷாத் அலி, கிரியக்ஷன்துரன், ஜாப்ரான் ஆகிய 3 பேரை கைது செய்து பறிமுதல் செய்த தங்க கட்டிகளுடன் யாழ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க | இந்தியாவுக்குள் நுழைந்த இந்தோனேஷிய இன்ஜினியருக்கு நேர்ந்த கதி - கைகொடுத்த நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR