தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு -வானிலை மையம்

Last Updated : Jun 6, 2017, 03:11 PM IST
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு -வானிலை மையம் title=

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியது, கடந்த மே மாதம் 30-ம் தேதி துவங்கிய தென்மேற்கு பருவமழை காற்றின் சுழற்சி தமிழகத்திற்கு சாதகமாக இருப்பதால், ஏற்கனவே தமிழக அனேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையிலும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 2 முதல் 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பெய்ய வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். 

கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 14 செ.மீ., மழையும், வலங்கைமானில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Trending News