ஆர்.கே.நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகின்றது.
இந்த பரிசீலனையில் இன்று நடிகர் விஷால் தாக்கல் செய்த விருப்ப மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக ஜெ., அண்ணன் மகள் ஜெ. தீபா அவர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்து. அதுவும் சுயேட்சை வேட்பாளர்கள் விதம், விதமாக வந்து தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
Actor Vishal's nomination for #RKnagarByElection in Chennai has also been rejected by the Election Commission.
— ANI (@ANI) December 5, 2017
படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது விஷாலின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது!