தமிழகத்தில் இனி பைக் டாக்சிகளுக்கு தடை? தமிழக அரசு உத்தரவு!

Bike Taxi Ban: தமிழகத்தில் பைக் டாக்ஸிகள் தொடர்பாக வாகன சோதனை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Dec 11, 2024, 11:38 AM IST
  • பைக் டாக்சிகளுக்கு தடை?
  • சோதனை மேற்கொள்ள உத்தரவு.
  • இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இனி பைக் டாக்சிகளுக்கு தடை? தமிழக அரசு உத்தரவு! title=

இன்று முதல் வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை சோதனை செய்யுமாறு தமிழக அரசு போக்குவரத்துக்கு துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் விதிகளை மீறி பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனி நபர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை எப்படி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும் என்று புகார் எழுந்துள்ளதால் போக்குவரத்து கமிஷனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

ஒவ்வொருவரும் தினமும் இரவு 7 மணிக்கு முன் வாகனங்களை சோதனை செய்தது குறித்த அறிக்கையை  அனுப்ப வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பைக், ஸ்கூட்டி போன்ற இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல முடியும் என விதிகள் உள்ளன. சிலர் இந்த வாகனங்களை டாக்சி போன்ற வடிவில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சாலை போக்குவரத்து சங்கம் சார்பில், போக்குவரத்துத் துறை ஆணையருக்குப் புகார் ஒன்று நேற்று (10.12.2024) அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, அனைவரும் விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய, வாகனங்களை சோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

யாராவது விதிகளை மீறுவதைக் கண்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பைக் டாக்சி பிரபலமாக உள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில்கள் இல்லாத இடங்களில், விரைவாகப் பயணம் செய்து பணத்தைச் சேமிக்க விரும்புபவர்களுக்கு பைக் டாக்சிகள் முதல் தேர்வாகும். கார்கள் மற்றும் ஆட்டோக்களில் சென்றால் நேரம் அதிகம் எடுத்து கொள்ளும், அதே சமயம் பணமும் அதிகம் செலவாகும்.

அதனால்தான் அதிகமான மக்கள் பைக் டாக்சிகளை தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், இந்த பைக் டாக்ஸி தொடர்பான சோதனைகளை அரசு மேற்கொண்டுள்ளதால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை முற்றிலும் தடை செய்யப்பட்டால், பைக் டாக்சிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் அதிக கட்டணம் செலுத்தி கார் அல்லது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ராபிடோ மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்குகின்றன.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News