சென்னை: சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக பருவமழை வழக்கத்தைவிட அதிகமாகவே பெய்து வருகிறது.
இது, மாநிலத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மழை வெள்ளம் தொடர்பாக சிறப்பாக பணியாற்றி வருவதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; pic.twitter.com/0BF7Hauzdp
— M.K.Stalin (@mkstalin) November 27, 2021
சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுக்க முடிந்தது பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பால்தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து, பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது! என்று அவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்! என தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! அது ஒமிக்ரானா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR