சென்னை: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் நீதிகேட்கும் பயணம் தொடங்கும் என முன்னாள் தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
இன்று ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செயற்கையாக ஒரு அரசியல் சூழல் ஏற்படுத்தபட்டு உள்ளது. கட்சியிலும் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் எண்ணத்திற்கு மாற்றாக ஒரு ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கபட்டவுடன் நீதிகேட்கும் பயணம் தொடங்கும்.
யாருடைய குடும்பத்தின் கட்டுப்பாட்டில் முதல்வர் இயங்குகிறார் என்பது இங்கு அனைவருக்கும் தெரியும். மக்களிடம் எற்பட்டுள்ள அதிருப்தி வருகின்ற தேர்தல்களில் வெளிப்படும்.
விடுதியில் இருந்தபோது எம்எல்ஏக்கள் எனக்கு ஆதரவு தருவதாக கூறினர்.
ஜெயலலிதா மறைவுக்கு மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பதவியேற்ற பின் அமைச்சர்கள், எம்பிக்கள் மூலம் இடையூறுகளை எற்படுத்தினார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடாது என்று எண்ணினேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சூழ்நிலையை பொறுத்துதான் காவல்துறையினர் செயல்பட்டனர். முதலமைச்சர் பதவியில் எண்ணால் முடிந்தவரை மனநிறைவாக பணியாற்றினேன்.
தானாகவே முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டனர். கட்சியில் பிளவு கூடாது என்பதால் தான் தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்தோம். மேலும் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைகள் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.