அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரும் நாகூர் தர்கா!

மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தினை துவங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 27, 2024, 09:05 AM IST
  • அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்கள்.
  • நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை.
  • அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரும் நாகூர் தர்கா! title=

மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தினை துவங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அதாவது எஸ்கலேட்டர் வசதி,  மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, நடைமேடைகள் மேம்படுத்தப்படுத்துதல், 5ஜி இணையச் சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்குதல், காத்திருக்கும் அறைகள் அமைப்பு, கூடுதல் நடைமேடைகள் அமைப்பு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமராக்கள், நுழைவு வாயில்களை புதுப்பொலிவு பெறச் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். 

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்கள்

இந்நிலையில் 508 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் என அந்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கடந்த சில மாதங்களுக்கு முன் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 55 ரயில் நிலையங்களும், பிகார் மாநிலத்தில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்க மாநிலத்தில் 37, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 34, அசாம் மாநிலத்தில் 32, ஒடிசா மாநிலத்தில் 25, ஆந்திரா மாநிலத்தில் 18, ஹரியானா மாநிலத்தில் 15, கர்நாடகா மாநிலத்தில் 13 ரயில் நிலையங்கள் அடங்கும். 

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள்

மேற்குறிப்பிட்ட 508 ரயில் நிலையங்களில் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் அடங்கும். அவை, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெரம்பூர், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிபூண்டி, அரக்கோணம், விழுப்புரம், சேலம், திருப்பூர், கரூர், போத்தனூர், நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகியன இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையமும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்...' மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!

நாகூர் ரயில் நிலையம்

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை.  மிகவும் தொன்மையான நாகூர் ரயில்நிலையத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் பல லட்சகணக்கான மக்கள் பயனடைவார்கள். உலகெங்குமிருந்து பல்லாயிரகணக்கான மக்கள் தினமும் நாகூர் வருகை புரிகிறார்கள் எனவே நாகூர் ரயில் நிலையத்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும் என மீண்டும் நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை

மேலும் நாகை பாரளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு இதே கோரிக்கையை அனுப்பி பாரளுமன்றத்தில் இதனை எடுத்து வைத்திட கோரியுள்ளார். நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கைக்கு தொடர் அழுத்தம் கொடுத்து இதனை சாத்தியமாக்கி தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News