பாலாஜிக்கு எதிரான வழக்கு; அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 31, 2022, 07:18 PM IST
  • செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு
  • சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
  • அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
பாலாஜிக்கு எதிரான வழக்கு; அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!  title=

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு தொடர்பான குறியீடு செய்யப்படாத ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்  வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவில் 3  வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

மேலும் படிக்க | அயல்நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்றம் கேள்வி

இதற்கிடையில், பணி வழங்குவதாக சோசடி செய்ததில் சட்டவிரோதமாக பணம் கை மாறியதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 3 வழக்குகளின் ஆவணங்கள் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட ஆதார ஆவணங்களை  வழங்க கோரி   அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மனு தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | கோவிலில் என்ன அணியனும்னு ஆகமத்தில இருக்கா? கண்டித்த நீதிபதி!

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் அமர்வு விசாரித்தது. அப்போது, அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜராக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளின்  விசாரணைக்கு சில ஆதார ஆவணங்கள் தேவைப்படுகிறது. அதை போலீஸ் தரப்பில் கேட்டபோது வழங்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.  செந்தில் பாலாஜிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து செய்யபட்டுள்ளதால் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கு சம்மந்தமான ஆவணங்களை வழங்க மறுப்பது அமலாக்க பிரிவு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அந்த ஆவணங்களை வழங்க எந்த தடையும் இல்லை என்றும் வாதிட்டார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும்,  சிறப்பு நீதிமன்றத்தில்  உள்ள ஆவணங்களை வழங்கவோ, மறுக்கவோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக வாதிட்டார்.

மேலும் படிக்க | ‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்.!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யபடாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். மேலும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News