வில்லிவாக்கம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இதனையொட்டி அங்கு ஆய்வுக்கு சென்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு பணிகளை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஸ்டீபன்சன்சாலை மேம்பாலம் இன்னும் ஒருமாதத்தில் கட்டி முடிக்கப்படும். தியாகராயநகர் நடைபாதை பாலம் ஓரிரு நாட்களில் திறக்கப்படும். இந்து சம அறநிலையத்துறையில் 4200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க | புரிதல் இல்லாதவர் ஆளுநர்... திராவிட மாடல் சர்ச்சைக்கு அமைச்சர் நறுக் பதிலடி!
ஆளுநர் என்ன ஆண்டவரா?
தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் வெயில் அதிகமாக இருக்கிறது. அண்ணாமலை அதனால் பேசுகிறார். கோவில் நிர்வாகத்துக்கு வாகனம் வாங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை. ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் திருக்கோவில்களுக்குரிய நிலங்களாக கண்டறியப்பட்டு கோவில் நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6 இடங்களை பாஜகவினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். சிதம்பரம் குழந்தை திருமணம் தொடர்பான எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை. ஆளுநர் என்ன ஆண்டவரா?, சிதம்பரம் தீட்சிதர்கள் என்றாலும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. தமிழக அரசு புகார் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.
ஆளுநர் விமர்சனம்
சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா செய்திதாளில் ஆளுநரின் பேட்டி இடம்பெற்றிருந்தது. அதில் திராவிட மாடல் காலாவதியானது என்றும், தமிழகம் அமைதி பூங்கா இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அளித்த ஆளுநர் மாளிகை தொடர்பான கணக்கு வழக்குகளில் உண்மையில்லை என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த பேட்டி, ஆளும் திமுக அரசுக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இதனால், முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளுநரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ’பூனைக்குட்டி வெளியே வந்தது’ ஓபிஎஸ் - சபரீசன் சந்திப்பு - ஜெயக்குமார் ட்வீட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ