தமிழகத்தில் எதிர் வரும் நீர் வான் நாளை முன்னிட்டு, இறைச்சி கடைகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறை, நவம்பர் மாதம் 4ம் தேதி நீர்வான் நாளை முன்னிட்டு, இறைச்சி கடைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
தீபாவளி அன்று மகாவீரர் நினைவு நாளை முன்னிட்டு, நீர்வான் நாளான அன்று அனைத்து இறைச்சிக் கூடங்கள், சிறு இறைச்சிக் கடைகள் ஆகியவற்றை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ALSO READ | Diwali Gift: ₹1,500க்கும் குறைவான விலையில், அசத்தலான தீபாவளி பரிசுகள்
எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் முடி இருக்கும். சென்னை மண்டலம்-5 திற்கு உட்பட்ட கோட்டங்களில் அமைந்துள்ள, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மேலும் நீர் வான் நாளன்று, பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது
முன்னதாக, வரும் நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ| பட்டாசு வெடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR