Harbajan Singh About ICC Champions Trophy: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன் டிராபி தொடங்கவுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டில் கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் விரையில் இந்திய அணியை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளது. இதில் எந்தெந்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறப் போகின்றனர் என்பதில் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
குறிப்பாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவாரா, ஆல்ரவுண்டர் ஜடேஜா தேர்வு செய்யப்படுவாரா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவர்களுக்குப் பதிலாக அக்சர் பட்டேல், சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.
துபாய் மைதான சூழலுக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இது குறித்து அவரது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
ஜடேஜாவுக்கு பதிலாக அக்சரை தேர்ந்தெடுப்பேன்
அவர் பேசியதாவது, சாம்பியன் டிராபிக்கு ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேலை தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால் பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு ரவீந்திர ஜடேஜா செய்து வந்ததை அக்சர் பட்டேல் செய்ய தயாராகிவிட்டார் என நினைக்கிறேன்.
ரிஷப் பந்துக்கு ஓய்வு கொடுக்கலாம்
அதேபோல் கே.எல்.ராகுல் இருக்கையில் அவருக்கு அடுத்தபடியாக அதாவது இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் அல்லது சஞ்சு சாம்சனை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது என நினைக்கிறேன். ஆனால் சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்தார். மேலும், ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடினார். அது மிகவும் நீண்ட தொடர். எனவே அவருக்கு ஓய்வு கொடுக்கலாம் என்றார்.
ரிஷப் இடம் பெறவில்லை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிகளில் விளையாட இருக்கிறது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று(ஜன.11) அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை. மேலும், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்குப் பின்னர் இந்திய அணியில் விளையாடாத முகமது ஷமி இத்தொடரில் தேர்வானதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பவுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விகீ), துருவ் ஜூரல் (விகீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல் (துணை கேப்டன்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர்.
மேலும் படிங்க: IND vs ENG: இனி இந்த வீரர்களுக்கு எப்போதும் டி20 அணியில் வாய்ப்பு இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ