நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?

பொங்கல் பண்டிகை தினத்தில் நீரழிவு நோயாளிகள் சக்கரை பொங்கல் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1 /6

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சக்கரையை தவிர்த்து வருகின்றனர். உடலில் இருக்கும் சக்கரை அளவை குறைக்க தினசரி நடைப்பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.

2 /6

பலரும் வெள்ளை சக்கரையை தவிர்த்துவிட்டு, நாட்டு சக்கரையை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளுடன் ஒப்பிடும்போது ஆரோக்கியத்தில் குறைவான தீங்கு விளைவிக்கும் என்று நம்புகின்றனர்.

3 /6

பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரைப் பொங்கல் சமைக்கும் போது, ​​நாட்டு சக்கரை பயன்படுத்தப்படுகிறது. இது நீரழிவு நோயாளிகளுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

4 /6

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டு சர்க்கரையில் செய்யப்படும் பொங்கல் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நினைக்கின்றனர். இவற்றில் வெள்ளைச் சர்க்கரையை போல அதிக கிளைசெமிக் இல்லை என்றாலும், இது இரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதற்கு பங்களிக்கும்.

5 /6

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித சக்கரையும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை பொங்கலை முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு கலந்த வெள்ளைப் பொங்கலைச் சாப்பிடுவது நல்லது.

6 /6

ஒருவருக்கும் சக்கரை பொங்கல் சாப்பிட வேண்டும் என்றால், பெரிய பாதிப்புகளை தவிர்க்க, பொங்கலின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே உட்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.