Ajith Kumar Advised Jason Sanjay : கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வருபவர், விஜய். இவரது மகன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இந்த நிலையில், அவருக்கும் அஜித்திற்கும் இடையே நடந்த ஒரு உரையாடல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சினிமாவிற்கு வந்த விஜய் மகன்!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை, நாம் விஜய்யுடன் சேர்த்து வசந்த முல்லை பாட்டிலும், நான் அடிச்சா தாங்கமாட்ட பாடலிலும் பார்த்திருப்போம். ஆனால் அதன் பிறகு அவர் பள்ளிப்படிப்பை தொடர்ந்து, வெளிநாட்டில் திரைப்பட படிப்பையும் படிக்க சென்று விட்டார். அங்கு இருந்து, சில ஆண்டுகளுக்கு பிறகு படிப்பை முடித்து விட்டு மீண்டும் சென்னைக்கு வந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, ஜேசன் சஞ்சயின் முதல் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, அவர் யாரை தன் படத்தில் ஹீரோவாக ஆக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. கிடப்பில் போடப்பட்ட இந்த படம், மீண்டும் சில மாதங்களுக்கு முன்பு உயிர்பெற்று, மடமடவென வேலைகள் தொடங்கின.
அஜித்தின் மேனேஜருடன் சஞ்சய்..
சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திராவும், விஜய் மகனும் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கின. இதையடுத்து, சஞ்சயின் படத்திற்கும் சுரேஷ் சந்திராதான் செய்தி தொடர்பாளர் என்பதால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், தங்களின் படத்திற்காக ஒன்றாக இணைந்து வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
அஜித் சொன்ன அட்வைஸ்..
நடிகர் அஜித், விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஒரு அட்வைஸ் செய்ததாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சஞ்சய், படத்தில் கமிட் ஆனவுடன் ஷூட்டிங் பணிகள் உள்ளிட்ட ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்க தாமதம் ஆனதாம். அப்போது கடுப்பான சஞ்சய், சுரேஷ் சந்திராவிற்கு ஒரு முறை போன் செய்து இது குறித்து பேசியிருக்கிறார். அப்போது தயாரிப்பு நிறுவனம் செய்யும் விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். இந்த போன் வந்த போது அஜித், சுரேஷ் சந்திராவின் அருகில்தான் இருந்தாராம். அப்போது, போனில் யாரென்று கேட்டிருக்கிறார். அது சஞ்சய் என தெரிந்த பிறகு, போனை வாங்கி அவரே பேசியிருக்கிறார்.
AK For Jayson SANJAY
Due to the delays in the shoot, Sanjay became frustrated and called his advisor, Suresh Chandra, to discuss the issues he was having with the production house. Ajith Kumar happened to be nearby when Sanjay made the call. Curious, AK asked Suresh who was… pic.twitter.com/n3arXFPysj
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) January 12, 2025
“கவலை படாதே. தயாரிப்பு நிறுவனத்தின் பக்கம் இருந்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் என்னிடம் சொல். நான் வேறு நிறுவனத்திற்கு பரிந்துரைக்கிறேன். பிரச்சனையை தீர்க்கலாம்.” என்று கூறி, சஞ்சய்க்கு ஆல் தி பெஸ் சொன்னாராம். இந்த தகவல் உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், சுரேஷ் சந்திரா சஞ்சயுடன் க்ளோஸாக இருப்பதை பார்க்கும் போது, இது உண்மையாக இருக்கலாம் ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஜேசன் சஞ்சய் பட ஹீரோ..
சஞ்சயின் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரேவாக நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் சில வாரங்களுக்கு முன்புதான் வெளியானது. இந்த படத்தை தன்னிடம் சஞ்சய் கூறும் போது, 2 அரை மணி நேரத்திற்கும் மேல் கூறியதாகவும், தான் இதைக்கேட்டு வியந்து விட்டதாகவும் ஒரே பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தமன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் இந்த படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அஜித்தின் மேனேஜருடன் விஜய் மகன் சஞ்சய்! தோள் மேல் கைப்போட்டு எடுத்த போட்டோ வைரல்..
மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் போட்டோஸ்!