தனுஷ் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான அதிரடி ஹிட் படங்களும் ரசிகர்களின் வரவேற்புகளும் பெற்ற டாப் ஹிட் தமிழ் திரைப்படங்கள். ஆண்டு தொடக்கத்தில் அதிக வசூலை அள்ளிக்குவிக்கும் தனுஷ் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தென்னிந்திய நடிகர்களுள் மிகவும் பிரபலமான நடிகர் தனுஷ், இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் பணியையும் செய்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பிப்ரவரி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. எப்போதும் வருடந்தோறும் தமிழ் திரையுலகில் தனுஷ் படங்கள் பொங்கல் அன்று வெளியாகும். மேலும் தனுஷின் வெற்றி படங்கள் அனைத்தும் கீழேக் கொடுக்கப்ப்ட்டுள்ளது.
ஆடுகளம்: இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் இணைந்து பணியாற்றிய படம். 2011 ஆம் ஆண்டில் பொங்கல் அன்று வெளியானது. இப்படம் விஜய் நடித்த காவலன் மற்றும் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தின் வசூலை முந்தியது.
பட்டாசு: துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2020 பொங்கல் அன்று வெளியானது. இப்படம் வெளியான நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படமும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் படம் வசூல் வேட்டையில் போட்டிப்போட்டு வசூலைக் குவித்தது.
குட்டி: 2010 ஆம் ஆண்டு பொங்கல் அன்று இப்படம் வெளியானது, தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. இப்படம் ஆர்யா என்ற தெலுங்கு படத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் அதிக வசூல்களைப் பெற்றுத் தந்தது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைக் குவித்தது.
படிக்காதவன்: தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் மற்றும் யாரடி நீ மோகினி இரண்டு திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான இப்படம் எதிர்பார்க்காத வெற்றியை தனுசுக்குப் பெற்றுத் தந்தது.
தேவதையைக் கண்டேன்; 2005 ஆம் ஆண்டு பொங்கலில் வெளியானது, இப்படம் வெளியாகும் நேரத்தில் போட்டிக்குப் பல படங்கள் முந்தியது. ஆனால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
தனுஷ் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான அதிரடி ஹிட் படங்களும் ரசிகர்களின் வரவேற்புகளும் பார்க்கலாம். வருடத் தொடக்கத்தில் அதிக வசூலை அள்ளிக்குவிக்கும் தனுஷ் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
இந்த வருடம் 2025 பொங்கல் முடிந்த பின்னரே தனுஷ் படம் வெளியாகவுள்ளது. இந்த வருடம் தனுஷ் தயாரிக்கும் படங்கள் மற்றும் நடிக்கும் படங்கள் அதிகமாக வெளியாகவிருக்கிறது.
ரெட் ஜெயிண்ட் வழங்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் தனுஷ் தயாரிப்பில் மற்றும் இயக்கத்தில் வருகின்ற பிப்ரவரி 7 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.