தமிழகத்தில் வழக்கம்போல் 4.5-லட்சம் லாரிகள் இயங்கும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ. 79.16 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 71.54-ஆகவும் விற்பனை ஆகிறது.
இதையடுத்து, டீசல் விலை தினசரி உயர்வு மற்றும் 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.
இந்நிலையில், டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் குமாரசாமி தமிழகத்தில் வழக்கம்போல் 4.5 லட்சம் லாரிகள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது,,! சிலர் சுய விளம்பரத்திற்காக வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், இன்றைய வேலைநிறுத்தம் அகில இந்திய மோட்டார் காங்கிரசுடன் இணைந்து ஜூலை 20 முதல் தொடர் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.