கன்னியாகுமரி இடைத்தேர்தல் 2021 February-க்கு முன் நடக்கும்: சத்தியபிரதா சாஹூ

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 2021 க்கு முன்னர் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்தியபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2020, 05:01 PM IST
  • கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2021 பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் நடக்கும்.
  • தமிழக சட்டமன்ற தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
  • தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 8 சதவிகித வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கன்னியாகுமரி இடைத்தேர்தல் 2021 February-க்கு முன் நடக்கும்: சத்தியபிரதா சாஹூ title=

சென்னை: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 2021 க்கு முன்னர் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்தியபிரதா சாஹூ (Sathyabrata Sahoo) அறிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் எச். வசந்தகுமாரின் (H Vasanthakumar) மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி (Kanyakumari) மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2021 பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதை விரைவுபடுத்துவதில் ஈடுபட்டுள்ள சாஹூ, வரவிருக்கும் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் வரைவு, நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார். வாக்காளர் அட்டையில் ஏதாவது திருத்தங்கள் செய்ய வேண்டுமானால், அவற்றை வாக்காளர்கள் செய்து கொள்ள டிசம்பர் 15 ஆம் தேதி வரை நேரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். வாக்காளர் விவரங்களில் மாற்றங்களைத் தெரிவிக்கும் விண்ணப்பங்களை சேகரிக்க, அதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முகாம்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.

ALSO READ: DMK தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது

புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் இறுதி பதிப்பு ஜனவரி 20, 2021 அன்று வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு, VVPAT மற்றும் EVM-கள் தயாராக உள்ளன என்றும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 8 சதவிகித வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: ஊழலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் தப்பா முடியாது: MKS

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News