கமல்ஹாசன் பிரச்சாரம்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் K.E பிரகாஷை ஆதரித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெப்படை பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய கமல்ஹசான், ஈரோட்டில் என் பிரச்சாரத்தை தொடங்க காரணம் பெரியார் என கூறினார். பெரியார் பெயரை சொன்னால் தமிழகத்தில் சரித்திரம் நடக்கும் என்று கூறிய அவர், லோக்கல் கட்சி வேறுபாடு மறந்து பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என எல்லாரும் கேட்டார்கள். நான் மறுத்தவுடன் தேர்தலில் நிற்காமல் தியாகம் செய்து விட்டார்கள் என்று கூறினார்கள். அது தியாகம் இல்லை தமிழ்நாடு காக்கும் வியூகம் என்று நான் சொன்னேன் என கமல்ஹாசன் பேசினார்.
மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர்! அண்ணாமலை கடும் விமர்சனம்
தமிழகத்தில் வளர்ச்சி திட்டம்
எனது கட்சிகாரர்கள் கேட்டனர் 4 சீட் கேளுங்கள் என்று. எனது கட்சிகர்ர்களுக்கு நான் சமாதானம் செய்து கொள்கிறேன். இங்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவு திட்டம் காமராஜர் தொடங்கி எம்ஜிஆர் மற்றும் அதன் நீச்சியாக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறார் என பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் கூலி வேலை முதல் பல வேலைக்கு வடமாநிலங்களில் இருந்து மக்கள் வருகிறார்கள். அதன் அர்த்தம் அங்கே வேலை இல்லை என கூறினார். ஏன் என்றால் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் வருகிறது. ஆனால் அங்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 7 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் அங்கிருந்து கூலி வேலைக்கு தமிழகத்திற்கு வருகிறார்கள் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
வடமாநிலத்தவர் ஏன் வேலைக்கு வருகிறார்கள்?
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன்," வளர்ச்சி என பேசுபவர்கள் உத்தரப்பிரதேசம், பீகாரில் எல்லாம் என்ன வளர்ச்சியை கொடுத்துவிட்டார்கள். அவர்கள் ஏன் அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள். வந்தவர்களை வாழவைக்கும் தமிழகம் என்று ஆண்டு காலமாக தமிழகம் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் மழை வெள்ளத்தின் போது கண்டுகொள்ளவில்லை. ஆனால் தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்தது. பிரதமர் திருக்குறளில் பேசுகிறார். இரண்டு மூன்று தமிழ் வார்த்தை உதிர்ப்பார். அது எல்லாம் நாடகம். எங்களுக்கு 29 பைசா மட்டுமே கொடுக்கும் நிலையில், மற்ற மாநிலத்திற்கு வாரிக் கொடுத்தும் அவர்கள் முறையாக நிதி செலவு செய்யவில்லை. சமையல் எரிவாயு விலை கேட்டால் வயிறு எரிகிறது.
பாஜக அடிமடியில் கை வைத்த கமல்
அனைத்து ஜாதினரும் அர்ச்சகர்கள் ஆகும் அரசு வேண்டுமா?, இந்திய ஜனாதிபதியே ஆனாலும் அர்ச்சனை செய்யும்போது வெளியே நில்லு சொல்லும் அரசு வேண்டுமா?, ஏழைகளுக்கான அரசு வேண்டுமா? அல்லது சிறிய பணக்காரர்களுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு வேண்டுமா? என்று சிந்தித்து ஒற்றை விரலில் சரித்திரத்தை மாற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள். இது தந்தை பெரியார் மண். மானமும் அறிவும் உள்ள இடம். நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால்
தமிழ்நாட்டின் திட்டங்களை இந்தியா முழுக்க அமல்படுத்த வேண்டும்" என கமல்ஹாசன் பேசினார்.
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்
"உதயநிதி ஸ்டாலின் ஒட்டுமொத்த இளைஞர்கள் குரலாக ஓங்கி ஒலிக்கிறார். எய்ட்ஸ் மருத்துவமனை என்னாச்சு என்று கேட்கிறார்?. ஒத்த செங்கல் தான் உள்ளது. அதையும் எடுத்து சென்று விட்டார்கள் என கேட்கிறார் அவர். அதற்கு பதில் இல்லை. ஈரோடு தொகுதியை மேம்படுத்த வேட்பாளர் பிரகாஷை பல ஐடியா வைத்துள்ளார். அதனால் வாக்கு செலுத்துங்கள். பெரியார் இன்று இருந்து இருந்தால் டெல்லிக்கு என்ன செய்தி அனுப்பி இருப்பாரோ அதை நீங்கள் தேர்தல் நாள் அன்று உங்கள் கை மையாக வையுங்கள். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசிற்கு உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் செலுத்த வேண்டும்" என கேட்டு கமலஹாசன் பேசி தனது உரையை முடித்தார்.
மேலும் படிக்க | சசிகலா EPS-ஐ விட இளையவர்... குண்டை தூக்கிப்போட்ட கே.சி. பழனிச்சாமி - என்ன மேட்டர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ