Reminder!! மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்!!

மின் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2020, 10:24 AM IST
  • கொரோனா தொற்று பரவத் துவங்கியதிலிருந்து மின் கட்டணம் செலுத்துவதில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • மின்சாரத் துறை ஊழியர்களுக்கும் மீட்டர் ரீடிங் எடுப்பதில் பல கடினங்கள் ஏற்படுகின்றன.
  • மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
Reminder!! மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள்!! title=

மின் கட்டணத்தை (Electricity Bill) செலுத்த தமிழக அரசு (TamilNadu Government) கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா தொற்று பரவத் துவங்கியதிலிருந்து மின் கட்டணம் செலுத்துவதில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறை (TNEB) ஊழியர்களுக்கும் மீட்டர் ரீடிங் (Meter Reading) எடுப்பதில் பல கடினங்கள் ஏற்பட்டதன் விளைவாக சில மாதங்களாக வழக்கமான செயல்முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. மின் கட்டணத்தை நேரில் சென்று செலுத்த வேண்டுமா, மீட்டர் ரீடிங் எடுக்கப்படாத நிலையில், எந்த அளவிற்கு கட்டணத்தை செலுத்த வேண்டும், என பல கேள்விகள் மக்கள் மத்தியில் உள்ளன.

இது ஒரு புறம் இருக்க, கொரோனா தொற்றால், அனைத்து நிறுவனங்களும்,தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், பலர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். வருவாய்க்கான வழி இல்லாமல் உள்ளனர். இவற்றின் அடிப்படையில் பொது மக்கள் அரசின் உதவியையும் நாடினர்.

ALSO READ: இன்றைய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் 4,526 பேருக்கு தொற்று! உங்கள் மாவட்ட நிலவரம்?

மின் கட்டணம் செலுத்துவதில் பல வித சிரமங்கள் இருந்ததால், கட்டணம் செலுத்த அவ்வப்போது கால நீடிப்பு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் அளித்தது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மின் கட்டணம் செலுத்த அளிக்கப்பட்ட அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில், இதுவரை மின் கட்டணம் செலுத்தாதவர்கள் இன்று மறக்காமல் கட்டணம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரடியாக சென்று கட்டணம் செலுத்துவதையும் மக்கள் தவிர்ப்பது நல்லது. இதனால் தொற்றின் அபாயம் இல்லாமல் இருக்கலாம். வீட்டிலிருந்தபடியே ஆன்லைனனில் (Online Payment) மின் கட்டணத்தை செலுத்தும்படி மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி என்பதால், இன்று மின் கட்டணம் செலுத்தாவிட்டால், அபராதத் தொகை விதிக்கப்படலாம் அல்லது மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆகையால், இந்த கோடைக் காலத்தில் மின் துண்டிப்பைத் தவிர்க்க, மக்கள் இன்றே, ஆன்லைனிலேயே மின் கட்டணத்தை செலுத்தி விடுவது நன்று!!

Trending News