நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக, சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.
தமிழக அரசு சார்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவாஜியின் பிறந்த நாளான இன்று, இந்த மணிமண்டபம் திறக்கப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று இதனைத் திறந்து வைத்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்கள் ரஜினி, கமலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இருவரும் விழா மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
Chennai: Tamil Nadu Deputy CM, Kamal Haasan & Rajinikanth at inauguration of actor Sivaji Ganesan's memorial. pic.twitter.com/95A4t6Xo0K
— ANI (@ANI) October 1, 2017
Actors Kamal Haasan & Rajinikanth interact with each other at inauguration of actor Sivaji Ganesan's memorial in Chennai. pic.twitter.com/igwhUJqfrQ
— ANI (@ANI) October 1, 2017
சிவாஜி கணேசன் நினைவை போற்றும் வகையில் அரிய பல புகைப்படங்கள் இந்த மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. சிவாஜி குடும்பத்தினர், திரையுலகினர் உட்பட பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
Aandavar @ikamalhaasan arrives for the #SivajiManiMandapam inauguration.. pic.twitter.com/DUH8xHYO61
— Irfan (@irfan12296) October 1, 2017
சிவாஜியின் படத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சிவாஜி குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.