கடந்த சில தினங்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் தமிழக அரசு இடையே நடைபெற்ற பேச்சுவாரத்தை தோல்வியுற்ற நிலையில், தொமுச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
தமிழகத்தில் திடீர் "ஸ்டிரைக்": பொதுமக்கள் அவதி!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஸ்டிரைக் குறித்து விரைவில் முடிவு எடுங்கள்: கமல் கோரிக்கை!
இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது:- மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும்.
மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும்.
- விஷால் pic.twitter.com/I2CmsgKa9c
— Vishal (@VishalKOfficial) January 5, 2018