ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய தகவல்.... இதை செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்

Life Certificate: இன்னும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் விரைவில் அதைச் செய்துவிட வேண்டும். இல்லையெனில் உங்கள் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2024, 07:51 PM IST
  • ஆயுள் சான்றிதழை எங்கு சமர்ப்பிக்கலாம்?
  • ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் எவ்வாறு சமர்ப்பிப்பது?
  • இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய தகவல்.... இதை செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் title=

Life Certificate: மாத ஓய்வூதியம் பெறும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த மாத முடிவிற்குள், அதாவது நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் இதை சமர்ப்பிக்க 10 நாட்களே உள்ளன. இன்னும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காத ஓய்வுதியதாரர்களுக்கு அதை செய்து முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகின்றது.

Central Government Pensioners

இன்னும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காதவர்கள் விரைவில் அதைச் செய்துவிட வேண்டும். இல்லையெனில் உங்கள் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். 80 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமர்ப்பிப்பு சாளரம் நவம்பர் 1 முதல் திறந்து இருக்கிறது. நாட்டில் சுமார் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.

ஆயுள் சான்றிதழை எங்கு சமர்ப்பிக்கலாம்

- ஓய்வூதியதாரர்கள் பல்வேறு ஆஃப்லைன் முறைகள் மூலம் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம்.

- ஓய்வூதியம் பெறுவோர், வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பிற நியமிக்கப்பட்ட இடங்களில் இந்த பணியை இதை செய்ய வேண்டும்.

- நவம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாவிட்டால், டிசம்பர் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும். 

- ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ஜீவன் பிரமான் போர்ட்டல், டோர்ஸ்டெப் பேங்கிங் (DSB) முகவர்கள், தபால் நிலையங்களில் பயோமெட்ரிக் சாதனங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் உள்ள படிவங்கள் மூலம் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க விருப்பம் உள்ளது. 

- மாநில அரசு ஊழியர்களும் தங்களது சான்றிதழ்களை கருவூல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

Jeevan Pramaan and Aadhar Face RD App: ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் எவ்வாறு சமர்ப்பிப்பது?

ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) மற்றும் ஆதார் ஃபேஸ் ஆர்டி செயலி (Aadhar Face RD App) மூலம் முகம், கைரேகை மற்றும் கருவிழி அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை அங்கீகரிக்க முடியும். சுமூகமான செயலாக்கத்தை உறுதிசெய்ய, உங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற உங்களின் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரத்துடன் உங்கள் ஆதார் எண் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | SIP: ரூ.25,000 சம்பளத்திலும் கோடீஸ்வரர் ஆகலாம்... பரஸ்பர நிதியம் கை கொடுக்கும்

இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆப்' மற்றும் 'ஆதார்ஃபேஸ்ஆர்டி' செயலிகளை இன்ஸ்டால் செய்யவும்.

- ஓய்வூதியதாரர் பற்றிய தேவையான விவரங்களை உள்ளிடவும்.

- பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு புகைப்படத்தை கேப்சர் செய்யவும்.

- தேவையான விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.

இந்த செயல்முறை முடிந்த பின்னர், ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான இணைப்புடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.

Senior Pensioners: வாழ்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க கடைசி தேதி

80 வயதிற்குட்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழ்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அக்டோபர் 1 முதல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வசதி உள்ளது. இவர்களுக்கான காலக்கெடுவும் நவம்பர் 30. மூத்த ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்க நவம்பர் வரை காத்திருப்பதற்குப் பதிலாக அக்டோபர் 1 முதல் அதை சமர்ப்பிக்க அனுமதிக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் இந்த உத்தரவு வந்தது. 

மேலும் படிக்க | Old Pension Scheme மீண்டும் வருகிறதா? இனி NPS இல்லையா? டெல்லியில் ஊழியர்களின் மாபெரும் பேரணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News