சென்னை: சமூக நீதிக்காக குரல் கொடுத்த சூர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன். முன்னணி நடிகராக இருந்துகொண்டு சமூக பிரச்சனைக்கு குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா “ புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் குறைவான ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்ட பள்ளிகளை மூடும் முடிவும் சரியல்ல. பள்ளிகளின் தரத்தை உயர்த்தமால் பள்ளிகளை மூடினால், கிராமப்புற மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல், நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்..? “ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு பலர் தன்களின் ஆதரவை தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து, ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே தன்னுடைய கேள்விகளை முன்வைப்பதாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கல்வியை பற்றி பேச தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்த போது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி கூறியிருந்தார்.
இந்தநிலையில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் இன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!! சின்ன குழந்தையாக ஒரு வயது இருக்கு போதே பல முறை உன்னை கொஞ்சி இருக்கேன். உனது பிறந்த நாளுக்கு பலமுறை வாழ்த்துக் கூறியுள்ளேன். போன் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ சொல்லியிருக்கேன்.
ஆனா, இப்ப, இந்தமுறை சமூக வலைத்தளம் மூலம் நான் பிறந்த நாள் வாழ்த்துக் கூறக் காரணம்... உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சமூக நீதிக்காக நீ கொடுத்த குரல்..... பொதுவாக சராசரி மனிதனுக்கு இருக்கும் பொதுவான குணம் நமக்கு எதுக்கு வம்பு என்பது தான்... பலர் சமூக நீதிக்காக குரல் கொடுத்துள்ளார்கள். நானும் கூட ஒரு ஓரமாக குரல் கொடுத்துள்ளேன்.
@Suriya_offl Heartfelt wishes from Appa and our entire family anna! #HappyBirthdaySURYA pic.twitter.com/igqGTne4oY
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 23, 2019
ஆனா ஒரு முன்னணி நடிகராக இருந்துகொண்டு சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்கும்போது பல்வேறு சங்கடங்கள் வரும். நானும் அதை உணர்ந்திருக்கேன். ஆனால் அந்த சங்கடங்களை கடந்து நீ (சூர்யா) குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. புதிய கல்வி கொள்கை தொடர்பாக மேலோட்டமாக கூறாமல், அதுகுறித்து ஆழ்ந்து ஆராய்ந்து கருத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இதனால் இந்த பிறந்த நாளுக்கு உன்னை வாழ்த்துகிறேன்.... உன்னை வணங்குகிறேன்.... வணக்கம்....!!
இவ்வாறு நடிகர் சத்தியராஜ் கூறியுள்ளார்.