பவுனுக்கு ரூ.1200 குறைந்த தங்கம் விலை - காரணம் என்ன?

தங்கம் விலை பவுனுக்கு இன்று ஒரே நாளில் 1200 ரூபாய் குறைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2022, 04:24 PM IST
  • திடீரென மளமளவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
  • நேற்று அதிகரித்த நிலையில் இன்று தங்கம், வெள்ளி விலை சரிவு
  • பவுனுக்கு 1200 ரூபாய் குறைந்துள்ளது தங்கம்
பவுனுக்கு ரூ.1200 குறைந்த தங்கம் விலை - காரணம் என்ன? title=

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர், உலகப் பொருளாதாரத்திலும், பங்குச்சந்தையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் போரை நிறுத்துமாறு கூறியும் ரஷ்யா தங்களுடைய ராணுவ நடவடிக்கையை கைவிட மறுத்து வருகிறது. இந்த விவகாரம் உலகளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அவரது ரகசிய மகள்களும் சொத்துக்களும்

கடந்த மாதம் 91 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வந்த கச்சா எண்ணெய், 100 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டாலரை எட்டுவது இதுவே முதன்முறையாகும். இதேபோல், பெட்ரோல், டீசல் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று கிராமுக்கு 108 ரூபாய் உயர்ந்த தங்கம் இன்று திடீரென 150 ரூபாய் சரிந்துள்ளது. அதாவது பவுனுக்கு 1200 ரூபாய் குறைந்து 38, 408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலையும் நேற்று அதிகரித்த நிலையில், இன்று கிடுகிடுவென சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்கு 7 ரூபாய் 70 காசுகள் குறைந்துள்ள வெள்ளி, கிலோவுக்கு 7,700 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மேலும் குறையுமா? என்பது ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்து இருக்கும் எனக் கூறியுள்ள நிபுணர்கள், இது தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News