நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செல்போன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | கட்டடத்தின் மீது சரிந்த தேர்..! பாகுபலி சிலை போல நிறுத்திய பக்தர்கள்! வைரல் வீடியோ!
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் செல்போன் விளையாட்டுக்கு அடிமையாகியதன் காரணமாக மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த சிறுவன் கைகளில் துப்பாக்கி வைத்து சுடுவதைப் போன்ற பாவனையை தொடர்ந்து செய்யும் காட்சிகளும் அந்த வீடியோ பதிவில் இடம் பெற்றுள்ளது. துப்பாக்கியை ரீ லோட் செய்து சுடுவது போல சிறுவன் கைகளில் சைகை செய்துகொண்டிருக்கிறார். அருகில் மருத்துவர்கள் ஒருசில ரிப்போர்ட்டுகளை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பப்ஜி விளையாட்டு, ப்ரீ பயர் போன்ற விளையாட்டுகளில் துப்பாக்கி வன்முறைகள் அதிகம் இருக்கும்.
Free Fire விளையாடினா இப்படி தான் ஆகும் மக்களே! உஷார்! pic.twitter.com/JzCUoUSvEZ
— வீர தமிழச்சி (@VTamilacci) April 6, 2022
சிறுவனின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது, கடந்த ஐந்தாம் தேதி அதிகாலையில் நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட சிகிச்சை முடித்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்ததாக தெரிவித்தார். அதன்பிறகு சிறுவனின் உறவினர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் அடுத்த நாள் அதிகாலையில் அவனை அழைத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து இதுகுறித்து காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதற்காக சிறுவன் அனுமதிக்கப் பட்டார் என்பது குறித்தும், அவரது தற்போதைய நிலை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க | ஒரே ‘பைக்கில்’ 7 பேர் பயணம்!
இதேபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. 5 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி கேமுக்கு அடிமையாகி அதனை தூக்க நிலையில் விளையாடிக்கொண்டிருந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளிகள் இல்லாததால், பெரும்பாலான குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானார்கள். இதனால் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிய மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த சிறுவனின் வீடியோ மூலம் தெரிகிறது. பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு அதிக நேரம் செல்போன் தருவதை தவிர்த்து அவர்களை கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR