முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையைப்பார்த்தே திமுகவினர் பயந்து நடுங்குவர் என கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் சிலை மீது வர்ணம்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைகளின் மீது மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றி சென்ற விவகாரம் அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் அதிமுகவினர் சார்பில் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெரு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிப்பது வழக்கம். இந்த நிலையில் அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது அங்கு அந்த சிலையில் இருந்த முகத்தில் பெயிண்ட் ஊற்றியிருந்தது. இந்த விஷயம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எம்ஜிஆர் முகத்தில் மீது பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலை இருந்த இடத்தில் இருந்த சில கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி இருப்பதால் இதை செய்தவர்கள் யார் என்பதை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இந்த நிலையில், பெயிண்ட் ஊற்றப்பட்ட அந்த சிலை சரி செய்யப்பட்டது. இந்த சிலைக்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக அமைச்சர் ஜெயகுமார் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்.
மேலும் படிக்க | நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நிர்வாகம் கெடுபிடி
ஜெயகுமார் மரியாதை..
வண்ணம் பூசப்பட்ட எம்.ஜி.ஆரின் சிலையை தின்னர் வைத்து வண்ணத்தை அழித்து தண்ணியால் கழுவி பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் திட்டங்கள் இன்றும் மக்கள் மனதில் என்றும் நீங்க திட்டங்களாக இருந்து வருகிறது” என்று கூறினார். மேலும், எம்ஜிஆரின் திருவுருவ சிலையை சேதப்படுத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் சேதப்படுத்திய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அந்த நபரின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் விசாரித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்படி கைது செய்ய காவல் துறையினர் தவறினால் இந்த சம்பவத்திற்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்
சிலையை பார்த்தே நடுங்குபவர்கள் திமுகவினர்..
மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்து 35ஆண்டுகள் ஆனாலும் அவரின் சிலையை பார்த்து திமுகவினர் நடுங்குவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழகத்திற்கு செய்த பல்வேறு நலத்திட்டங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார் என்றும் அவர் மறைந்து 35 ஆண்டுகள் ஆனாலும் அவரின் சிலையை பார்த்து அஞ்சக்கூடிய இயக்கமாக திமுகவினர் இருந்து வருகிறார்கள் என்றும் கூறினார். தைரியம் திராணி இல்லாமல் நேருக்கு நேர் திமுகவினர் சந்திக்க முடியாமல் ஒரு பிற்போக்குத்தனமாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும்
வண்ணம் பூசினால் மட்டும் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் திட்டங்களை மூடி மறைத்து விட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | தகாத உறவில் ஈடுபட சொல்கிறார்! ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பரபரப்பு புகார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ