சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கியது Ford நிறுவனம்

இந்திய சந்தையில் மகிந்திரா உடனான கூட்டு முயற்சியில், நுழைந்த போர்டு நிறுவனம், 1999 ஆம் ஆண்டு போர்ட் இந்தியா லிமிடெட் என பெயரிடப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 20, 2021, 09:33 AM IST
  • இந்திய சந்தையில் மகிந்திரா உடனான கூட்டு முயற்சியில், நுழைந்த போர்டு நிறுவனம்.
  • அதன் தயாரிப்புகள் பெரிதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை.
  • 25 ஆண்டுகளுக்கு பின் பலத்த நஷ்டம் காரணமாக மூடுவதாக போர்டு நிறுவனம் அறிவித்தது
சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கியது Ford நிறுவனம் title=

சில நாட்களுக்கு முன்னர் கார் வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட் தனது தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தது. இந்திய சந்தையில் மகிந்திரா உடனான கூட்டு முயற்சியில், நுழைந்த போர்டு நிறுவனம், 1999 ஆம் ஆண்டு போர்ட் இந்தியா லிமிடெட் என பெயரிடப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, சென்னையில் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி பணியை தொடக்கியது. முதற்கட்டமாக சுமார் 2100 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்த நிலையில், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு அதன் மூலம் தற்போது, நேரடியாக சுமார் 4000 தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.

எனினும் போர்டு நிறுவனத்தினால், சந்தையில் தாக்குபிடிக்க இயலவில்லை. அதன் தயாரிப்புகள் பெரிதாக வாடிக்கையாலர்களை ஈர்க்கவில்லை. அதனால், 25 ஆண்டுகளுக்கு பின் பலத்த நஷ்டம் காரணமாக விரைவில் மூடுவதாக போர்டு நிறுவனம் அறிவித்தது.

 ALSO READ | தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி

ஃபோர்டு நிறுவனத்தின் மூலம் நேரடி வேலை வாய்ப்பை பெறும் சுமார் 4,000 பேர் உட்பட ஃபோர்டு நிறுவனத்திற்கு மூலப்பொருட்களையும் உதிரி பாகங்களையும் விநியோகித்து வரும் சுமார் 4,000 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையும் கேள்விக்குறியாகி விடும் என்பதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது .

இந்நிலையில் ஏற்கனவே 20 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் இன்னும் பல மாதங்களுக்கு மறைமலைநகரில் உள்ள ஆலையில் உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகன உற்பத்தி நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. 

ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News