Exit Poll 2021: புதுச்சேரியில் BJP கூட்டணி ஆட்சி அமைக்கும்: கருத்துகணிப்பில் தகவல்

5 மாநிலங்களுக்கான தேர்தல் கருத்து கணிப்புகள வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 29, 2021, 11:03 PM IST
Exit Poll 2021: புதுச்சேரியில் BJP கூட்டணி ஆட்சி அமைக்கும்: கருத்துகணிப்பில் தகவல் title=

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் மே 2 ஆம் தேதி வரவுள்ளன. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று பல்வேறு கருத்துக்கணிப்பு அமைப்புகளால் வெளியிடப்பட்டன. 

அதன்படி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் (NDA), பாஜக கூட்டணி (BJP) ஆட்சியமையும் என ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 16 - 20 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக -காங்கிரஸ் (DMK) (Congress) கூட்டணி 11 -13 இடங்களை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கருத்துக்கணிப்பு முடிவுகள் (மொத்த இடங்கள் - 30):
யூனியன் பிரதேசத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஜக முன்னிலையில் உள்ளது. 

ALSO READ | அமோக வெற்றி பெற்று கோட்டையை பிடிக்கிறது திமுக: கருத்துக்கணிப்புகளில் clean sweep

Zee News Maha Exit Poll:

பாஜக + - 19, காங்கிரஸ் + - 10, மற்றவை - 1

Republic-CNX:

பாஜக + - 16-20, காங்கிரஸ் + - 11-13, மற்றவை - 0

ABP News - C Voter:

பாஜக +: 19-23, காங்கிரஸ் + - 6-10, மற்றவை: 1-2

அனைத்து கருத்துக்கணிபுகளிலும், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி பெறுவதை கண்கூடாகக் காணமுடிகிறது. வெவ்வேறு கருத்துக்கணிப்புகளில் சில வித்தியாசங்கள் இருப்பதை காண்பது வழக்கம். எனினும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை, அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே மாதிரியாக காண்பிக்கின்றன. 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News