ரபேல் பேர ஊழல் புத்தகம் தடை விவகாரத்தில் யு-டர்ன் அடித்த தேர்தல் ஆணையம்

ரபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2019, 07:10 PM IST
ரபேல் பேர ஊழல் புத்தகம் தடை விவகாரத்தில் யு-டர்ன் அடித்த தேர்தல் ஆணையம் title=

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஒப்பந்தத்தில் சுமர்ர் ரூ. 58 ஆயிரம் கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது ஊழல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. ஆனால் ஊழல் புகார் குறித்து தொடர்ந்து மோடி தலைமையிலனா மத்திய அரசு மறுத்து வருகிறது. இதுக்குறித்து ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், நீதிமன்ற கண்காணிப்பில் CBI விசாரணை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதனையடுத்து நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பில் எஸ்.விஜயன் என்பவர் ஒரு புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம் இன்று மாலை 6 மணி அளவில் சென்னையில் உள்ள பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது. 

ஆனால் இன்று மதியம் திடிரென கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள் தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதாகா கூறி, இந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது எனக்கூறி நூற்றுக்கணக்கான புத்தகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பல எழுத்தாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்தநிலையில், தற்போது இதுக்குறித்து பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ரபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதுக்குறித்து விசாரித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்படும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறினார்.

Trending News