புதுடெல்லி: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் (Thiruvalluvar) சிலை மீது சாணி வீச்சு அவமானப்படுத்தி உள்ள சில மர்ம நபர்களை தமிழக காவல்துறை தேடி வருகிறது. திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், திமுக (DMK) தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் (MK Stalin), தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி விட்டது என்றும், அதற்காக ஆளும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என கடுமையாக ஆளும் கட்சியை சாடியுள்ளார்.
திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்து போனர்வர்களை தேசதுரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், திருவள்ளுவர் சிலை அவமதிப்பது தமிழ்ச்சமூகம் பொறுக்காது என்றும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுக்குறித்து தனது தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் கருத்து பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்காக காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.