நீட் தேர்வுக்கு எதிராக தமிழக முழுவதும் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவைச் சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கடலூரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வே.கணேசன் கலந்து கொண்டு கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் திமுக நடத்திய நீட் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி வைத்தனர்.
மேலும் படிக்க | நீட்: அதிமுக பச்சை துரோகம் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் - விளாசிய திருச்சி சிவா
இதில் கடலூர் ஒன்றிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி ,மருத்துவ அணி கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும் ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட நிலையில் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மட்டும் பங்கேற்கவில்லை.
கடலூர் திமுக கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்கள் ஒருங்கிணைந்து மாவட்ட தலைநகரில் நடைபெறுகின்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. அமைச்சருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையேயான இருக்கும் உட்கட்சி விவகாரத்தால் பங்கேற்கவில்லை என்றும் திமுக தொண்டர்களே கிசுகிசுத்தனர். மாநிலம் தழுவிய அளவில் திமுக முன்னெடுத்த போராடத்தில் திமுகவின் உட்கட்சி பூசலும் வெளியே தெரியும் அளவுக்கு மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொள்வது கட்சிக்கு அழகல்ல என்றும் பேசிக் கொண்டனர்.
மேலும் படிக்க | மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு: காலவகாசம் கேட்கும் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ