மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்களின் இடங்களில் இரவிலும் தொடர்ந்து நடைபெற்ற சோதனை. பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகை தந்து, அங்கிருந்து குழுக்களாக பாதுகாப்பு பணிக்காக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் காலை 7:00 மணி முதல் வருமான வரித்துறையினார் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் இல்லம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர், அவர்கள் பயன்படுத்திய கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவியல் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருமான வரித்துறை சென்றனர் சில இடங்களில் வருமானவரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் சோதனை சொய்வதற்கான போலீசார் உதவியுடன் தொடங்கியது.
மேலும் படிக்க | DMK FILES பார்ட் 2 யாரை பற்றியது? சூசகமாக சொன்ன அண்ணாமலை!
சோதனை நடக்க இருந்த கொங்கு மெஸ் மணி, துணை மேயர் தாரணி சரவணன், பால விநாயகர் பூளு மெட்டல்ஸ் உரிமையாளர் தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதால் அவர்களுக்கு வீடுகளில் சோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ஒரு இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடைபெற்று வருகிறது. காந்திகிராம் பகுதியில் உள்ள பிரேம் குமார் இல்லம், பால விநாயகர் ப்ளூ மெட்டல்ஸ் சொந்தமான சின்னா டாங் கோவில் பகுதில் உள்ள இடங்களில் சோதனை, க.பரமத்தி பகுதியில் உள்ள கிரஷர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது, அதே போல கொங்கு மெஸ்ஸில் சோதனைக்கு வந்த அதிகாரிகள் அலுவலகத்தில் காலையில் சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வருமான வரித்துறையில் பிடியில் ஐந்து இடங்களில் செந்தில் பாலாஜி நண்பர்களின் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். சுமார் 150 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் வருமான வரித்துறையினர் சோதனை செய்ய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட கரூருக்கு வருகை புரிந்துள்ளனர். சோதனையானது இரவில் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் நாளையும் கரூர் மாவட்ட பல்வேறு இடங்களில் வருமானவரி பெறுனர் சோதனை ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. கரூரில் துணை மேயர் தாரணி வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள், சோதனைக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறி வீட்டின் கேட் முன்பு சீல் வைத்தற்கான நோட்டிஸ் ஒட்டப்பட்டது, இதையறிந்த துணை மேயரின் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு அதிகாரியை வெளியே விடாமல் அமர்ந்து தர்ணா போராட்டம் பரபரப்பு.
அங்கு வந்த ஏடிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். சீல் வைக்கப்பட்ட வீட்டினுள் துணை மேயரின மனைவி மற்றும் மகன் இருந்துள்ளனர். முடிவில் கேட்டில் ஒட்ட பட்டிருந்த சீல் வைத்தற்க்கான நோட்டிசை அகற்றி அதனை துணை மேயரின் மனைவியிடம் ஒப்படைத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். துணை மேயர் தாரணி சரவணன் இன்று மதியம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டி கிராமத்தில் உள்ள சங்கர் ஆனந்த் கல்குவாரி மற்றும் எம்சாண்ட் யூனிட்டுகளில் இரண்டவது நாளாக வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் என்று கூறப்படும் சங்கர் ஆனந்த் இவரது சாய் புளு மெட்டல் எனும் எம் சண்ட் யுனிட்டில் அசிஸ்டன்ட் கமிஷனர் சக்திவேல் தலைமையில் ரைடு நடந்து வருகிறது. இதேபோல் காளியாபுரம் பகுதியில் உள்ள அமைச்சரின் நண்பர் அரவிந்த் என்பவர்கள் பண்ணை வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி தம்பியின் பிரம்மிக்க வைக்கும் கார் கலெக்ஷன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ