சொத்து குவிப்பு வழக்கு தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி மற்றும் மைத்துனன் மைத்துனர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலாவின் அக்கா மகள் மற்றும் டிடிவி தினகரன் சகோதரி சீதளாதேவி, அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இவர்கள் குற்றவாளிகள் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.68 கோடி சொத்து சேர்த்ததாக கூறி பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டுகள் சிறையும் தலா 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் சரணடையாததால் தற்போது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.