உதவித்தொகையை உயர்த்திக் கேட்டுப் போராடிய மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்த காவல்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தன்னிடம் சிபாரிசு கேட்டு வந்த பெண்ணை கர்ப்பமாக்கியதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு செய்தியாளர்களிடம் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்!
சொத்து குவிப்பு வழக்கு தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி மற்றும் மைத்துனன் மைத்துனர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிடிவி ஆதரவு எம்.பி. வசந்தி முருகேசன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இனைந்தார்.
பரபரப்பிற்கு வேறு பெயர் அதிமுக எனும் அளவிற்கு தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது அதிமுக அரசு.
அதிமுகவின் அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனித்து செயல்பட தொடங்கினர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக லோக்சபா மந்திரிகள் பி செங்குட்டுவன் மற்றும் எம் உதயகுமார் அவர்கள் டிடிவி தினகரனை சென்னையில் அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளனர்.
Tamil Nadu: AIADMK Lok Sabha MPs B Senguttuvan and M Udhayakumar met TTV Dhinakaran at his residence in Chennai. pic.twitter.com/C0VOiHiYKm
— ANI (@ANI) September 4, 2017
சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசிய அளித்தார் அப்போது,
அணிகள் இணைந்தாலும் சசிகலா தான் பொது செயலாளர். முதல்வர் தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று தான் அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்த ஆதாயத்திற்காகவும் கோரிக்கை விடுவிக்கவில்லை. துரோகம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பாக விடமாட்டோம்.
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., இன்று தினகரனை நேரில் சந்தித்த்து அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்த அவர், சசிகலாவை சந்தித்த பின்னர், நாளை தனது முடிவை அறிவிப்பேன் என்றார்.
ஓ.பி.எஸ்., துணை முதல்வர் ஆக்கப்பட்டதை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் வழங்கினர் தொடர்ந்து 18 பேர் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏகே. போஸ், தேனியில் தினகரனை சந்தித்து பேசினார். பின்னர் கூறுகையில்:-
கடந்த சில நாட்களாக அதிமுக அம்மா பேரவை பொறுப்பில் இருந்து பலரை தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார். இந்நிலையில் இன்று மேலும் சிலரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று அவர் தெரிவித்துள்ளதாவது:
அ.தி.மு.க அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா நீக்கி அவருக்கு பதிலாக நடிகர் செந்தில் நியமிக்கப் பட்டுள்ளார்.
இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து ப.குமார் எம்.பி. நீகப்பட்டுள்ளார்.
மகளிர் அணி செல்யலாளர் பொறுப்பில் இருந்து கீர்த்திகா முனுசாமி நீகப்பட்டுள்ளார்.
அதிமுக அம்மா பேரவை பொறுப்பில் இருந்து சிலரை தினகரன் அதிரடியாக நீக்கி வருண் தினகரன் தற்போது கரூர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
TTV Dinakaran removes Transport minister MR Vijayabhaskar from Karur party Secretary post #AIADMK
— ANI (@ANI) August 23, 2017
அதிமுக அம்மா பேரவை பொறுப்பில் இருந்து சிலரை தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார்.
இதன்படி ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கி அவருக்கு பதிலாக மாரியப்பன் கென்னடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tamil Nadu: #TTVDhinakaran sacked TN Minister RB Udhaya Kumar from party post & appointed new district secretaries for Thanjavur and Madurai
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.