ஜெ., மறைவு: டிசம்பர் 5 தமிழ்நாட்டின் இருண்ட நாள்- ஓ.பி.எஸ்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

Last Updated : Jan 24, 2017, 12:49 PM IST
ஜெ., மறைவு: டிசம்பர் 5 தமிழ்நாட்டின் இருண்ட நாள்- ஓ.பி.எஸ் title=

சென்னை: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து கட்சி தலைவர்களும் தீர்மானத்தில் பேசினர்.

மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் நரசிம்மன்,நவநீதகிருஷ்ண பாண்டியன்,கண்ணையன்,கோ.சி. மணி, பாலுச்சாமி, ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, சோ. ராமசாமி , பாலமுரளிகிருஷ்ணா, பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டோருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டன.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டபேரவையில் இரங்கல் தீர்மானம் செய்யப்பட்டு.

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டுவர பாடுபட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தமது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் புரட்சித்தலைவி அம்மா- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

புரட்சித்தலைவி அம்மா பூவுலகத்தில் இருந்து மறைந்தாலும், இதயத்தில் இருந்து தமிழகத்தை வழிநடத்தி செல்கிறார்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

சவால்களை வென்று சரித்திரம் படைத்தவர்  புரட்சித்தலைவி அம்மா- முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம்.

உச்சங்களின் உச்சத்தை தொட்ட உலக அதிசயம் அம்மா, விண்தொட்ட வெற்றிகளை தம் விவேகத்தால் பெற்றவர் அம்மா- சபாநாயகர் தனபால்.

எல்லையில்லா வெற்றிகளின் தொகுப்பாகத் திகழ்ந்தவர் அம்மா. அறிவுக்கூர்மை, இலக்கை நோக்கிய பயணம் அம்மாவின் சிறப்பு அம்சங்கள்- சபாநாயகர் தனபால்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்.

Trending News