கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கடும் நடவ டிக்கை எடுத்து வருகிறார். இதைய டுத்து மாவட்டம் முழுவதும் புகையி லைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணிக்கபோலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தென்தாமரை குளம் அருகே டீக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று இரவு தென் தாமரைகுளம் அருகே இலந்தையடி விளையில் உள்ள ஒரு டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டீ கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதில் டீக்கடை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 72) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த 10 மூடைகளில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும் - இளங்கோவன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ